Nov 21, 2012


அந்நியனாய் நம்மைப் பார்க்கும்
இலங்கை மனிதர்க்கு
நம் அன்னை நாட்டில் வாழும்
சகோதரப் பாசம் தெரியவில்லை..
எனவே
சித்திரையிலும் நித்திரை தொலைத்து
சிந்தை நித்தமும் கலங்கி
சிந்தாத ரத்தம் சிந்தி
சோர்ந்து விடாதே தமிழனே
நீ தரை வீழ்ந்தாலும்,
உன் தியாகம்
இன்னொரு தமிழனை
வாழ வைக்கும்
என்று நிம்மதியாய் நீ உறங்கு!
விரைவில் ஒரு நாள்
ஈழத்து பாசம் வெல்லும்
இலங்கையின் மோசம் கொல்லும்!!!
நிம்மதியாய் நீ உறங்கு!!!



இது நான் இலங்கை போர் நடக்கும் முன்பு எழுதியது... :(

Sep 13, 2012



 
என் காதல் உனக்கு புரிந்தாலும்,
புரியாமல் இருப்பது போல் நடிக்க
உன்னால் மட்டுமே முடியும்!!

May 2, 2012

என் காதல்!!

 

என்னிடம்
இருந்து நீ எடுக்க, எடுக்க
 குறையாமல்
வந்துகொண்டே இருக்கும்
அமுதசுரபி என் காதல்!!