அரக்க பரக்க ஓடிவந்து, மூச்சிரைக்க
ரயிலேறி,இடம் பார்த்து அமர்ந்து,
எதிரே இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லி,
நான் திருச்சிங்க, நீங்க?என ஊர் கதைகள் பேசி,
வாங்கும் திண்பண்டங்களை அவர்களோடு பகிர்ந்து உண்டு,
குழந்தைகள் படிப்பு, பள்ளி,
கல்லூரி செலவுகள், நாட்டுநடப்பு,
அரசியல்,சினிமா பேசி,
வேலைவாய்ப்பு பற்றி அரட்டை முடித்து,
பொழுது போய்,தூங்கி எழுந்து,
பல் விலக்கி,காபி குடித்து,
மறுபடி
ஒரு குட்மார்னிங் சார்!! சொல்லி,
இரண்டு
நிமிட உரையாடல் பின்னர்,
இறங்க வேண்டிய இடம் வருமுன்
மூட்டை
முடிச்சை தயார் செய்து,
சரி
சார்.. அப்புறம் பார்க்கலாம்!!
என்றொரு பெரிய
சிரிப்புடன் முடிந்து போகும்,
நாம்
கடந்து செல்லும் ரயில் சினேகங்கள்!!