Jul 7, 2011


உன்னோடு
இரவில் கூடி களித்து,
மகிழ்ந்த பின்னே,
காலையில் எழுந்ததும்,
உதரி மடித்த படுக்கைக்கு நடுவே,
மீதமாய் கலைந்து கிடந்தது
என் வெட்கம்!!


நாம் இருவரும் ஆடும், 
காதல் கண்ணாம்பூச்சியில்,
உன்னை கண்டுபிடிக்க முடியாமல்,
எனக்குள்ளே தொலைந்துகொண்டே
இருப்பவன் நீ!


என் இதயம்
துடிப்பதை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்,
எத்தனை முறை 
துடிக்கிறதென்று இல்லை,
எத்தனை முறை
உன் பெயரை அது
சொல்கிறதென்று!!