Feb 18, 2011

கனவுகள் இலவசம்!!


 

ாலையில்,, கதிரவனின்
முகத்தில்
முழிக்கவும்,
வழியில்
கோயில்
பிள்ளையாரை
தரிசிக்கவும்,
சாலை
கடக்கும்
முதியோர்க்கு
உதவவும்,
அலுவலகத்தில்
உற்சாகமாய்
பணி
செய்யவும்,
மாலை
கடற்கரையில்
அலைகளோடு
பேசவும்,
வீடு
திரும்பிய பின்
அம்மாவின்
இரவு
நறும காபியை சுவைக்கவும், இளையராஜாவின்
பாடலோடு
உறங்கவும்
முடிந்தது,
என்னால்
என்
இன்று கனவுகளில் மட்டும்!!

பாரம்!

அன்பு காதலிக்கு,உன் இமையில்
தூசி விழுந்தாலும்
என் இதயம்
பாரமாய் இருப்பது ஏன்!!

விடுதலைப் பத்திரம்?!

காதலால் கசிந்துருகி,
களவு போன மனம்,
அவளிடமே திரும்ப வந்தது,
கசங்கிய நிலையில
விடுதலைப் பத்திரமாய்!!

கழுதைகள்???




அன்று
பொதி சுமந்த கழுதைகள்
இன்று உல்லாசமாய் திரிய,
இன்றோ,
ஓடி ஆடி விளையாட வேண்டிய
குழந்தைகள்,
பொதி சுமக்கும் கழுதைகளாய் மாறினர்!


ஐஸ்க்ரீம்




 


நீ விரும்பிய
ஐஸ்க்ரீம்  வாங்கி,
நாம் இருவரும்
உண்ணும் போது,
உன் நுனி நாக்கின்
குளிர்ச்சியை தாங்காமல்
உருகி வழிந்தோடியது
ஐஸ்க்ரீம்!! 


Feb 17, 2011

சுனாமி!!

இயற்கையின் கோபம்
மனிதன் மேல்,
அழிந்தது மனிதன் மட்டுமே,
இயற்கையின் கோபத்தை
கண்ட பிறகும்
உனக்கு ஏன் கோபம் மானிடா
மனிதனின் மனதினை
மனதால் வெல்ல கற்றுக்கொள்

கோபத்தால் அல்ல!!!

Feb 16, 2011

விண்வெளிக்கும் தெரியாது

நொடி

நொடிகளில் இருந்து
நகர மறுக்கின்றது கடிகாரம்
ஏனென்றால்
உன்னை பார்த்த நொடியை
கடக்க கூடாது என்று!!!

நீச்சல்

நீச்சல் கற்றுக் கொள்கிறேன்,
உன் நினைவுகளில் மூழ்கும் போது,
தத்தளிக்காமல் நீந்துவதர்க்கு!!

விழியோரம்

விழியோரம் கசிந்த நீரும்
கண்ணை விட்டு
விடை பெறாமல்
நின்றது!!நான்
உன்னை பிரிய மனமில்லாமல்
நின்றது போல்!!!

நீ உறங்கு!

அந்நியனாய் நம்மைப் பார்க்கும்
இலங்கை மனிதர்க்கு
நம் அன்னை நாட்டில் வாழும்
சகோதரப் பாசம் தெரியவில்லை..எனவே
சித்திரையிலும் நித்திரை தொலைத்து
சிந்தை நித்தமும் கலங்கி
சிந்தாத ரத்தம் சிந்தி
சோர்ந்து விடாதே தமிழனே
நீ தரை வீழ்ந்தாலும்,உன் தியாகம்
இன்னொரு தமிழனை
வாழ வைக்கும்
என்று நிம்மதியாய் நீ உறங்கு!விரைவில் ஒரு நாள்
ஈழத்து பாசம் வெல்லும்
இலங்கையின் மோசம் கொல்லும்!!!நிம்மதியாய் நீ உறங்கு!!!

செல்லசிணுங்கல்

உன் மேல் கோபம் கொள்ள நினைத்தால் கூட,
உன் செல்ல சிணுங்கல்களில்
அதை மறக்க செய்து விடுகிறாய்!!

அழகாய்!!

உன்னை பெண் பார்க்க வந்தபோது,
நீ மறைந்திருந்த கதவிடுக்கில் தெரிந்த
உன் நிழல் கூட
மிக அழகாய் இருந்தது!!

உன் கண்களில்!




தினமும்
நமக்குள் நடக்கும்
ஊடல்களுக்கு நடுவே
ஒளிந்துள்ள உன்  காதலை  
தேடிப்பிடித்தேன் உன் கண்களில்!

Feb 15, 2011

ஈழம்!!!





வயலில் பாசனத்திர்க்கு 
நீர் இல்லாமல்,
தமிழரின் குருதி
வளமானதென்று
தங்கள் வயலுக்கு
எடுத்து கொள்கின்றனரோ!!!



பிரிவு





வெட்கம்

நீ
என் கன்னத்தில்
முத்தமிட்டதால் பார்
நான் மட்டும் இல்லை,
என் பெயரும் கூட
வெட்கத்தில் சிவந்துவிட்டது!


ஆசை


என் இதயம்
உன் இதயத்தை விட்டு
பிரியாமல் இருக்க விரும்புவதால்
நான் உன்னை அணைத்தபடியே
இருக்க  ஆசைப்படுகிறேன்!



நிழல்



பெண்ணே!!


உன் கருவிழியில்
படம் பிடித்தாய் என்னை,
 என் கனவுகளில்
இடம் பிடித்தாய்
பெண்ணே,
நீ என் கை எட்டும்
தூரத்தில் இருந்தும்,
ஏன் என் இதயத்திற்கும் வலிக்காமல்
கை நழுவி சென்றாய் நீ!!




மழைச்சாரல் !


கண் சிமிட்டும்
மின்னலுக்கும் தெரியாது,
கருப்பு ஆடை அணிந்த
மேகத்துக்கும் தெரியாது,
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் மனதில் மழைச் சாரல் என்று!


கஷ்டமில்லை!!



மலையை சுமக்க சொன்னாலும்
கஷ்டமில்லை,
மனதில் உன்னை சுமக்கும் போது!

கடவுளின் சந்தோஷம்!!



 
பிச்சை எடுத்த சிறுமிக்கு 
ஐந்து ருபாய் கொடுத்தேன்

பசிக்கு உதவும் என்று,
ஓடிச்சென்று,

ஐஸ்க்ரீம் வாங்கியவளின் 
கண்களில்  தெரிந்தது
கடவுளின் சந்தோஷம்!!

நீ!!



விழிகள்
மூட ஏங்கினாலும்,
இமைகள்
ஒத்துழைக்கவில்லை,
ஏனெனில் இமைகளுக்கிடையில் நீ!!