Jul 7, 2011


உன்னோடு
இரவில் கூடி களித்து,
மகிழ்ந்த பின்னே,
காலையில் எழுந்ததும்,
உதரி மடித்த படுக்கைக்கு நடுவே,
மீதமாய் கலைந்து கிடந்தது
என் வெட்கம்!!


நாம் இருவரும் ஆடும், 
காதல் கண்ணாம்பூச்சியில்,
உன்னை கண்டுபிடிக்க முடியாமல்,
எனக்குள்ளே தொலைந்துகொண்டே
இருப்பவன் நீ!


என் இதயம்
துடிப்பதை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்,
எத்தனை முறை 
துடிக்கிறதென்று இல்லை,
எத்தனை முறை
உன் பெயரை அது
சொல்கிறதென்று!!

Apr 26, 2011

ரகசியம்,

 என்னை
மொத்தமாய் உருகி
வழிந்தோட செய்யும் ரகசியம்,
உன்
இதழ் முத்தத்திற்கு மட்டுமே தெரியும்!!

Apr 19, 2011


உனக்கு நான்
என் வாழ்நாள்
முழுவதும் கடனாளி,
நீ எனக்கு கொடுத்த
முத்தங்களை
எண்ணிப்பார்க்கும் போது!!

உடைத்துவிடாதே!!


என்னை
இறுக்கி அணைக்காதே,
உன்
காதலின் தீவிரத்தில்
என்
இதயம்,
சுக்கு நூறாய்
உடைந்துவிடும்!!


நீயும் நானும்!

என்றாவது தோன்றும்
வானவில்லாய் நீ,
என்றும் உன்னை எதிர்ப்பார்த்து
ரசிக்க காத்திருக்கும்
மானிடனாய் நான்!!

Apr 18, 2011

துன்பம் தரும் என்றாலும்
என்றென்றும்,
காதலிக்கவே விரும்புகிறேன்,
காதலிக்கும் ஆண்,
நீயாக இருந்தால்!!

Apr 7, 2011

புவி ஈர்ப்பு விசைக்கும்,
உன் விழி ஈர்ப்பு விசைக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்,
அது உலகில் உள்ள
எல்லா பொருள்களையும் ஈர்க்கும்,
உன் விழியோ, என் ஒருவனை மட்டுமே ஈர்க்கும்!!

Mar 28, 2011

நிழல்??



உலகில் எல்லோருக்கும்
ஒரு நிழல் தான்,
ஆனால், உனக்கு மட்டும் எப்படி
மூன்று நிழல்??
ஒன்று உன்னுடையது,
மற்ற இரண்டு நானும் என் நிழலும்!!



குழந்தையின் பசியறிந்து
உணவு ஊட்டும் தாய் போல,
என் மனப்பசியறிந்து
தினமும் எனக்கு
உன் காதலை ஊட்டுகிறாய்!!

Mar 21, 2011

ரயில் சினேகங்கள்!!!

அரக்க பரக்க ஓடிவந்து, மூச்சிரைக்க
ரயிலேறி,இடம் பார்த்து அமர்ந்து,
எதிரே இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லி,
நான் திருச்சிங்க, நீங்க?என ஊர் கதைகள் பேசி,
வாங்கும் திண்பண்டங்களை அவர்களோடு பகிர்ந்து உண்டு,
குழந்தைகள் படிப்பு, பள்ளி,
கல்லூரி செலவுகள், நாட்டுநடப்பு,
அரசியல்,சினிமா பேசி,
வேலைவாய்ப்பு பற்றி அரட்டை முடித்து,
பொழுது போய்,தூங்கி எழுந்து,
பல் விலக்கி,காபி குடித்து,
றுபடி
ஒரு குட்மார்னிங் சார்!! சொல்லி,
இரண்டு
நிமிட உரையாடல் பின்னர்,
இறங்க வேண்டிய இடம் வருமுன்
மூட்டை
முடிச்சை தயார் செய்து,
சரி
சார்.. அப்புறம் பார்க்கலாம்!!
என்றொரு பெரிய
சிரிப்புடன் முடிந்து போகும்,
நாம்
கடந்து செல்லும் ரயில் சினேகங்கள்!!

வறுமை!



 

வெட்கம்!!

கைகளால் உன் முகத்தை
நீ மறைத்தாலும்,
உன் கைகளின்
இடுக்கு வழியே வழிந்தோடியது
உன் வெட்கம்!!

Mar 17, 2011

காதல்!!!




பாறையில்
இருந்து
கசிந்து கொண்டே
இருக்கும் நீர் போல,
என்
மனதில் இருந்து
கசிந்து கொண்டே
இருக்கும்,
உன் மேல்
எனக்குள்ள காதல்!!!

Mar 3, 2011

மிச்சம் இருந்தது,,,,

நம் காதலை
கரைக்க நினைத்தேன்
என் கண்ணீரில்,
கண்ணீர்
கரைந்து காலியான 
பின்னும்
மிச்சம் இருந்தது
நம் காதல் மட்டுமே!!


காதலை கற்றுக்கொள்ள!


  இருக்க,
கடவுள்
காதலை
என்னை மட்டும்
கற்றுக்கொள்ள
சொன்னான்...,
பின்னர்
உன்னை
காதலை என்று!!
கற்றுக்கொடுத்தான்
தான் தெரிந்தது காதலிக்கவே
கற்றுக்கொள்ள
எவ்வுளவோ

உன்னையே சுற்ற!


ராட்டினம்
சுற்ற ஆசைப்படும்
குழந்தையை போல்,
என் மனம்
எப்போதும் உன்னையே
சுற்ற ஆசைப்படுகிறது
!!

Feb 18, 2011

கனவுகள் இலவசம்!!


 

ாலையில்,, கதிரவனின்
முகத்தில்
முழிக்கவும்,
வழியில்
கோயில்
பிள்ளையாரை
தரிசிக்கவும்,
சாலை
கடக்கும்
முதியோர்க்கு
உதவவும்,
அலுவலகத்தில்
உற்சாகமாய்
பணி
செய்யவும்,
மாலை
கடற்கரையில்
அலைகளோடு
பேசவும்,
வீடு
திரும்பிய பின்
அம்மாவின்
இரவு
நறும காபியை சுவைக்கவும், இளையராஜாவின்
பாடலோடு
உறங்கவும்
முடிந்தது,
என்னால்
என்
இன்று கனவுகளில் மட்டும்!!

பாரம்!

அன்பு காதலிக்கு,உன் இமையில்
தூசி விழுந்தாலும்
என் இதயம்
பாரமாய் இருப்பது ஏன்!!

விடுதலைப் பத்திரம்?!

காதலால் கசிந்துருகி,
களவு போன மனம்,
அவளிடமே திரும்ப வந்தது,
கசங்கிய நிலையில
விடுதலைப் பத்திரமாய்!!

கழுதைகள்???




அன்று
பொதி சுமந்த கழுதைகள்
இன்று உல்லாசமாய் திரிய,
இன்றோ,
ஓடி ஆடி விளையாட வேண்டிய
குழந்தைகள்,
பொதி சுமக்கும் கழுதைகளாய் மாறினர்!


ஐஸ்க்ரீம்




 


நீ விரும்பிய
ஐஸ்க்ரீம்  வாங்கி,
நாம் இருவரும்
உண்ணும் போது,
உன் நுனி நாக்கின்
குளிர்ச்சியை தாங்காமல்
உருகி வழிந்தோடியது
ஐஸ்க்ரீம்!! 


Feb 17, 2011

சுனாமி!!

இயற்கையின் கோபம்
மனிதன் மேல்,
அழிந்தது மனிதன் மட்டுமே,
இயற்கையின் கோபத்தை
கண்ட பிறகும்
உனக்கு ஏன் கோபம் மானிடா
மனிதனின் மனதினை
மனதால் வெல்ல கற்றுக்கொள்

கோபத்தால் அல்ல!!!

Feb 16, 2011

விண்வெளிக்கும் தெரியாது

நொடி

நொடிகளில் இருந்து
நகர மறுக்கின்றது கடிகாரம்
ஏனென்றால்
உன்னை பார்த்த நொடியை
கடக்க கூடாது என்று!!!

நீச்சல்

நீச்சல் கற்றுக் கொள்கிறேன்,
உன் நினைவுகளில் மூழ்கும் போது,
தத்தளிக்காமல் நீந்துவதர்க்கு!!

விழியோரம்

விழியோரம் கசிந்த நீரும்
கண்ணை விட்டு
விடை பெறாமல்
நின்றது!!நான்
உன்னை பிரிய மனமில்லாமல்
நின்றது போல்!!!

நீ உறங்கு!

அந்நியனாய் நம்மைப் பார்க்கும்
இலங்கை மனிதர்க்கு
நம் அன்னை நாட்டில் வாழும்
சகோதரப் பாசம் தெரியவில்லை..எனவே
சித்திரையிலும் நித்திரை தொலைத்து
சிந்தை நித்தமும் கலங்கி
சிந்தாத ரத்தம் சிந்தி
சோர்ந்து விடாதே தமிழனே
நீ தரை வீழ்ந்தாலும்,உன் தியாகம்
இன்னொரு தமிழனை
வாழ வைக்கும்
என்று நிம்மதியாய் நீ உறங்கு!விரைவில் ஒரு நாள்
ஈழத்து பாசம் வெல்லும்
இலங்கையின் மோசம் கொல்லும்!!!நிம்மதியாய் நீ உறங்கு!!!

செல்லசிணுங்கல்

உன் மேல் கோபம் கொள்ள நினைத்தால் கூட,
உன் செல்ல சிணுங்கல்களில்
அதை மறக்க செய்து விடுகிறாய்!!

அழகாய்!!

உன்னை பெண் பார்க்க வந்தபோது,
நீ மறைந்திருந்த கதவிடுக்கில் தெரிந்த
உன் நிழல் கூட
மிக அழகாய் இருந்தது!!

உன் கண்களில்!




தினமும்
நமக்குள் நடக்கும்
ஊடல்களுக்கு நடுவே
ஒளிந்துள்ள உன்  காதலை  
தேடிப்பிடித்தேன் உன் கண்களில்!

Feb 15, 2011

ஈழம்!!!





வயலில் பாசனத்திர்க்கு 
நீர் இல்லாமல்,
தமிழரின் குருதி
வளமானதென்று
தங்கள் வயலுக்கு
எடுத்து கொள்கின்றனரோ!!!



பிரிவு





வெட்கம்

நீ
என் கன்னத்தில்
முத்தமிட்டதால் பார்
நான் மட்டும் இல்லை,
என் பெயரும் கூட
வெட்கத்தில் சிவந்துவிட்டது!


ஆசை


என் இதயம்
உன் இதயத்தை விட்டு
பிரியாமல் இருக்க விரும்புவதால்
நான் உன்னை அணைத்தபடியே
இருக்க  ஆசைப்படுகிறேன்!



நிழல்



பெண்ணே!!


உன் கருவிழியில்
படம் பிடித்தாய் என்னை,
 என் கனவுகளில்
இடம் பிடித்தாய்
பெண்ணே,
நீ என் கை எட்டும்
தூரத்தில் இருந்தும்,
ஏன் என் இதயத்திற்கும் வலிக்காமல்
கை நழுவி சென்றாய் நீ!!




மழைச்சாரல் !


கண் சிமிட்டும்
மின்னலுக்கும் தெரியாது,
கருப்பு ஆடை அணிந்த
மேகத்துக்கும் தெரியாது,
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் மனதில் மழைச் சாரல் என்று!


கஷ்டமில்லை!!



மலையை சுமக்க சொன்னாலும்
கஷ்டமில்லை,
மனதில் உன்னை சுமக்கும் போது!

கடவுளின் சந்தோஷம்!!



 
பிச்சை எடுத்த சிறுமிக்கு 
ஐந்து ருபாய் கொடுத்தேன்

பசிக்கு உதவும் என்று,
ஓடிச்சென்று,

ஐஸ்க்ரீம் வாங்கியவளின் 
கண்களில்  தெரிந்தது
கடவுளின் சந்தோஷம்!!

நீ!!



விழிகள்
மூட ஏங்கினாலும்,
இமைகள்
ஒத்துழைக்கவில்லை,
ஏனெனில் இமைகளுக்கிடையில் நீ!!